கடந்தகால தவறுகளுக்காக அஸ்ஸாம் மக்களிடம் உல்ஃபா தீவிரவாத அமைப்பின் தலைவர் அனூப்சேத்தியா மன்னிப்பு கோரினார்.

 அஸ்ஸாம் மாநிலம், குவாஹா ட்டியில் உள்ள நீதிமன்றத்தில் சேத்தியா திங்கள்கிழமை ஆஜர்படுத்தபட்டார். அதை தொடர்ந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது புரட்சிக்கு எதிர்ப்புதெரிவித்த காரணத்துக்காக உயிரை இழந்த பொதுமக்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

 அவர்களது ஆன்மா சாந்திய டையவும் பிரார்த்திக்கிறேன். எனது கடந்த கால தவறுகளுக்காக அஸ்ஸாம் மக்களிடம் நான் மன்னிப்புகோருகிறேன். அரசுடனான அமைதி பேச்சுவார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று பலர் சந்தேகிக்கின்றனர். ஆனால், உண்மையில் அமைதி பேச்சுவார்த்தையை நான் ஆதரிக்கிறேன்.

வங்கதேசத்தில் இருந்து என்னை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வந்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் ஆகியோருக்கு கடமைப் பட்டிருக்கிறேன் என்றார் சேத்தியா.

Leave a Reply