கடந்த இரண்டுவருடங்களில் 23 சதவீதம் அதிக மின்உற்பத்தி செய்யப்பட் டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ்கோயல் சென்னையில் நேற்று தெரிவித்தார்.

சென்னை வந்துள்ள பியூஷ் கோயல் நேற்று மாலை முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்இல்லத்தில் சந்தித்து பேசினார்.  முன்னதாக சென்னை ஐ.ஐ.டி.யில் நிருபர்களிடம் பியூஷ்கோயல் கூறுகையில்,பாஜக அரசு மத்தியில் அமைந்த பிறகு, கடந்த கடந்த 2 வருடங்களில் 46 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி தொடங்கி யுள்ளோம். கடந்த 2 வருடங்களில் மின் உற்பத்தி 23% அதிகரித்துள்ளது.நாடுசுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாக மெத்தனமாக விடப் பட்டிருந்த மின் உற்பத்திதுறை, மோடி வழிகாட்டுதலுக்கு பிறகு உத்வேகம் அடைந்துள்ளது. நிலக்கரி ஊழலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதன் மூலம், தட்டுப்பாடு இன்றி, அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி நடக்கிறது, என்றார்

Leave a Reply