பொதுத்துறை வங்கிகள், அவற்றின் மொத்தகடனில், குறிப்பிட்ட சதவீதத்தை, வாராக்கடன் பிரிவில் வைப்பது, வழக்கமான வங்கி நடைமுறைதான். அதேநேரத்தில்,அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி என செய்திகள் வெளியாகியுள்ளன. வாராக்கடன்களை தங்களது வரவு-செலவு கணக்கு அறிக்கையில் இருந்துநீக்குவது பொதுத் துறை வங்கிகள் வழக்கமாக கடை பிடிக்கும் நடைமுறை. ரிசர்வ்வங்கி வழிகாட்டுதல்படி இது நடக்கிறது. வரிபயன் மற்றும் மூலதன மேம்பாட்டுக்காக வங்கிகள் இப்படி செய்கின்றன. இதற்கு 'கடன்தள்ளுபடி' என்று அர்த்தம் அல்ல. இந்தகடனை பெற்றவர்கள், அதை திருப்பிச் செலுத்தியே ஆகவேண்டும். கடன்களை வசூலிப்பதில் வங்கிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகின்றன.

2014ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, பொதுத் துறை வங்கிகளுக்கு ஏராளமான வாராக் கடன்கள் இருந்தன. 2008 முதல் 2014 வரை விதிகளை மீறி அதிகளவு கடன்கொடுத்ததால், 2008 ல் 18 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், 2014 மார்ச்சில் 52 லட்சம் கோடியாக அதிகரித்தது.2018 – 19 நிதியாண்டின் முதல் காலாண்டில், வாராக்கடன்களில் ரூ.36,551 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டு விட்டது. 2018 – 19 நிதியாண்டில் ரூ.74,562 கோடி கடன் வசூலிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில், ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 34 கோடி வாராக்கடன்களை திரும்ப வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply