கடலூர், ஐதராபாத், ஜம்மு உள்பட ஐந்துபகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி வெப்காஸ்ட் மூலம் இன்று(செப்.,26) கலந்துரையாடுகிறார்.

இதுகுறித்து இமாச்சல் உயிரிவளத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சய் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கடலூர், ஐதராபாத், ஜம்மு, இமாசல பிரதேசத்தின் பலாம்பூர், அசாமின் ஜோர்ஹாட் உள்ளிட்ட ஐந்து பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளுடன் இணையவழி தொழில்நுட்பம் (வெப்காஸ்ட்) மூலம் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். அவர் டில்லி விக்யான்பவனிலிருந்து நேரடி ஒளிபரப்பில் கலந்துகொள்வார். அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அதற்கான விளக்கங்களையும், தீர்வுகளையும் அவர்தெரிவிப்பார்.

இதைத்தொடர்ந்து, புதிய பயிர் ரகங்கள், மலர்வகைகள் ஆகியவற்றை பிரதமர் அறிமுகப்படுத்துவார். இப்புதிய ரகபயிர்கள் விவசாயிகளுக்கு அதிகபலன் தரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுமார் ஒருமணி நேரத்துக்கும் குறையாமல் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply