அமித்ஷாவின் நேற்றைய கேரளாவிஜயம் கேரள அரசியலில் மாபெரும் தாக்கத்தை  விளைவித்துள்ளது. பிஜேபி என்றாலே முகம் சுழித்து வந்த
கேரள அறிவு ஜீவி வட்டங்கள் நேற்றைய அமித்ஷாவின் கேரள விஜயத்தில் அவரிடம் வரிந்து கட்டிக் கொண்டுவரிசையில் நின்று பிஜேபி உறுப்பினர் கார்டினை வாங்கியதை பார்க்கும் பொழுது கேரள மக்களிடையே பிஜேபி மீது இருந்த தயக்கம் உடைந்து விட்டது என்றே கூற வேண்டும்.

சபரிமலை போராட்டங்கள் கேரளாவில் வேர்பிடித்து நின்ற இடதுசாரி அரசியலை வெட்டி வீழத்தும் என்பதை உறுதி படுத்தும் விதமாக அமித்ஷா முன்
நிலையில் பிஜேபி யில் இணைய வரிசையாக வந்து நிற்கிறார்கள் அறிவு ஜீவி கூட்டங்கள் .

முன்னாள் இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயர்நேற்று அமித்ஷா  முன்னிலையில் பிஜேபி யில் ஐக்கிய மாகி விட்டார்.,நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த மாதவன் நாயர் பிஜேபியில் சேர்கிறார் என்கிற விசயம் நடைபெற்றுள்ளது இதனால் பாலக்காடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது மாதவன்நாயர் தான் என்பது உறுதியாகி விட்டது.

ஏற்கனவே பாலக்காடு நகராட்சி யை கைப்பற்றியுள்ள பிஜேபிக்கு மாதவன் நாயரை பாலக்காடு பாராளுமன்ற தொகுதியில் இறக்கி விட்டால் திருவனந்தபுரத்தை அடுத்து பிஜேபி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ள தொகுதி லிஸ்டில் அடுத்து பாலக்காடு தான் இருக்கும்.
.
அடுத்து முன்னாள் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவரும் காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பின ரான ராமன் நாயர் பிஜேபியில் இணைந்துள்ளார்
இவர்களோடு பெண்ணிய எழுத்தாளரும் மாநில மகளிர் கமிசனில் உறுப்பினராக இருந்த பிரமிளா தேவி பிஜேபி யில் இணைந்துள்ளார்.

இவர்களை விட முக்கியமான கேரள விவிஐபி ஆன முன்னாள் கேரள டிஜிபி சென் குமார்  அமித்ஷாவை வந்து பாரத்துள்ளார். பின ராயி விஜயனுடன லவ் ஜிகாத் விசயத்தில் நேரடி யாக மோதி டிஜிபி பதவியை இழந்தாலும் உச்ச
நீதி மன்றம் சென்று பினராயி அரசை போட்டு தாக்கி மீண்டும் டிஜிபியாக உச்சநீதிமன்றத்திடமே டிஜிபி போஸடிங் ஆர்டர் பெற்று கேரளாவுக்கு வந்தவர்

இவருக்கு பிஜேபி மீது ஒரு வகையான பற்று இருந்துகொண்டே இருக்கிறது. அமித்ஷாவின் கேரள விசிட்டில் சென் குமார் அமித்ஷா வை வந்து பார்த்துள்ளார்.ஆனாலும் இன்னமும் அவர் முறைப்படி பிஜேபி யில் இணைய
வில்லை.சென்குமாரின் பிஜேபி இணைப்பு கேரளாவை மிரள வைக்கும் வகையில் மிகப் பிரமாண்ட மாக இருக்கும் வகையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மலங்கா ரா சிரியன் ஆர்த்தோடக்ஸ் சர்ச்சுகளில் உள்ள பாதிரியார் தாமஸ் ஜான் அவர்களும் அமித்ஷா வை சந்தித்து பிஜேபி யில் இணைந்துள்ளார்.கேரளாவில் இருக்கும் 18 சதவீத கிறிஸ்தவர்களி டையே அதிக அளவில் இருப்பவர்கள் சிரியன் கிறிஸ்தவர்கள் தான்..

இன்றைக்கு கேரளாவில் செல்வாக்கோடு இருப்பவ ர்கள் இந்த சிரியன் கிறிஸ்தவர்கள் தான்.நிறைய நாயர்கள் மதம் மாறி சிரியன் கிறிஸ்த வர்களாகி விட்டார்கள். அதனால் இவர்களின் பழக்கவழக்கங்கள் இந்து மதத்தை பின்பற்றியே இருப்பதால் இவர்களை நஸ்ரானி என்றும் அழைக்கிறார்கள்
அதாவது இந்துக்களில் நாயர்கள் என்றால் சிரியன் கிறிஸ்தவர்களில் உள்ள நாயர்களை நஸ்ரானி என்கிறார்கள்.

இன்றைய கேரள பொருளாதாரமே இந்த நஸ்ரானிகள் கைகளில் தான் இருக்கிறது. என்றே கூறலாம் முத்தூட் பைனான்ஸ் ஒன்றே போதும் இவர்களின்
பொருளாதார வளர்ச்சிக்கு உதாரணம். கிட்டத்தட்ட 130 டன் தங்கம் முத்தூட் பைனான்சில் மட்டுமே இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள் ்

இவர்கள் வைத்துள்ள தங்கத்தைவிட சிங்கப்பூர் , ஸ்வீடன் தென்னாப்பிரிக்கா மெக்சிகோ ஆகிய நாடுகளின் அரசு கஜானாவில் இருக்கும் தங்கத்தின் அளவு கம்மிதான் என்றால் முத்தூட் எப்படிமக்களை சுரண்டி தங்கத் தை சுருட்டியுள்ளார்கள் என்று தெரி ந்து கொள்ளலாம்.

அடுத்து ஜாய் ஆலூக்காஸ் குருப் எல்லாமே சிரியன் கிறிஸ்தவர் கள்தான். இப்போதைய காங்கிரஸ் தலைவர்களான உம்மன்சாண்டி ஏ.கே அந்தோணி
நம்ம நயன்தாரா கூட நஸ்ரானி தான். இப்படி கேரள மாநிலத்தில் செல்வாக்கு கொண்டு காங்கி ரஸ் ஆதரவாளர்களாக இருக்கும் சிரியன் கிறிஸ்த வர் களை பிஜேபி வளைக்க முற்படுவது ஒரு நல்ல முயற்சியே..

கேரளாவில் அமித்ஷா காலடி எடுத்து வைத்தவுடன் ஒட்டுமொத்த கேரளாவே அதிர்ந்தது என்றே கூற வேண்டும்.அதுவும் பினராயி விஜயன் பிறந்து வளர்ந்த கண்ணூர் மண்ணில் அமித்ஷாவின் காலடி பட்டதன் மூலம் பல பிஜேபி தொண்டர்் களின் ரத்தத்தினால் சிவந்து இருந்த கண்ணூர் மண் வெளிறி காவியாக நிறமாறி விட்டது என்றே கூறலாம்..

சும்மா இல்லங்க..அப்பா மகன் என்று இரு தலைமுறை கண்ணூரில் இடது சாரிகளால் அழிக்கப்பட்டுள்ளது.சாவசேரி உத்தமன் அவருடைய மகன்
ரமீத் என்று இரண்டு தலைமுறை அழிக்கப்பட்டுள்ளது. கணவன் மகன் இரண்டு பேர்களையும் இழந்து நிற்கும் அந்த தாய்க்கு என்ன சொல்லி
ஆறுதல்கூற முடியும்?

இதற்கு கேரள மண்ணில் இருந்தே இடதுசாரிகளை விரட்டு்வதே அந்த தாய்க்கு நாம் அளிக்கும் ஆறுதலாக இருக்க முடியும்.

இன்னொரு விசயம் தெரியுமா? சபரிமலை போராட் டங்களுக்கு பிறகு கேரளாவில் உள்ள இந்துக்களிடம் இடதுசாரிகளுக்கு உள்ள செல்வாக்கு சரிந்து கொண்டே வருகிறது என்பதை சில கருத்துக்கணிப்புகள் கூறி வருகின்றன. இதில் முக்கியமானது ஈழவர்கள் கம்யூனிஸ்ட் ஆதரவி்ல் இருந்து விலகுகிறார்கள் என்பதே..

சென்ற தேர்தலில் 75 சதவீத ஈழவர்கள் இடதுசாரிகளுக்கு தான் வாக்களித்தார்கள். ஆனால் இப்பொ ழுதோ 32 சதவீத ஈழவர்கள் தான் இடதுசாரி ஆதரவுநிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. அத்தனை ஈழவர்களையும் சபரிமலை போராட்டங்கள் மாற்றியுள்ளது என்றே
கூறலாம்.

இதற்கு உறுதி அளிக்கும் வகையில் ஈழவ மக்களின்குரு பீடமான சிவகிரி மடத்திற்கு சென்ற அமித்ஷாவுக்கு ஈழவர்கள் திரண்டு நின்று ஆதரவு தெரிவித்து
ள்ளார்கள். அமித்ஷா சிவகிரி மடத்திற்கு சென்றதன்முக்கிய நோக்கமே ஆளும் இடதுசாரிகளின் நிரப்பந்தத்தினால் ஒதுங்கி இருக்கும் ஈழவ மக்களின்
குருபீடமான ஸ்ரீ நாராயண தேவ் இந்திரன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.