தொழிலதிபர் விஜய் மல்லை யாவின் கடன்களை மோசமான வாராக் கடன் பட்டியலில் சேர்த்து ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்வதாக வெளியான தகவல் குறித்து நிதிமந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.  

கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன்தொகையை தள்ளுபடிசெய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா வங்கியில் கடனைவாங்கிய சுமார் 63 கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடிசெய்ய முடிவு செய்துள்ளதாகவும், இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன் தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் தகவல் வெளியானது.  

இந்த பட்டியலில் ரூ.1,201 கோடி கடன்பெற்றுள்ள விஜய் மல்லையா பெயர் முதல் இடத்தில் உள்ளது.இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்தவிவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதிமந்திரி அருண் ஜெட்லி, ‘ஸ்டேட் வங்கி தனது வாராக்கடன் குறித்த தகவல்களை புத்தகப்பதிவில் செயல்படாத சொத்து என்ற பெயரில் பட்டிய லிட்டுள்ளது. அவற்றை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட வில்லை. மத்திய அரசு அந்தகடனை வசூலிக்க அழுத்தம்கொடுத்து வருகிறது   வங்கிகளின் வசூலாகாத கடன்களை பட்டியலிடும் கணக்குப் புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி என்று அர்த்தம் இல்லை. கடனைவசூலிக்கும் முயற்சிகள் தொடர்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply