கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே ஏற்பட்ட மோதலில். பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டியை அடுத்த வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்குள் பூத் சிலிப் கொடுக்கும்போது பாஜக, நிர்வாகிகளுக்கும் அ.ம.மு.க நிர்வாகிகளுக்குமிடையே கேலிப் பேச்சு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியேவந்த பா.ஜ.க-வினரிடம், அ.ம.மு.க, தி.மு.க, காங்கிரஸ் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

அதில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சதீஷ், பழனியப்பன், மணிகண்டன், பரமேஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள், ஆசாரி ப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொண்டர்களை கன்னியாகுமரி தொகுதி பாஜக. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Leave a Reply