சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு சரக்குகப்பல்கள் மோதியதால், கச்சா எண்ணெய் கடலில்கலந்தது. இனதால், எண்ணூர், திருவொற்றியூர் கடற்கரை முதல், பட்டினம் பாக்கம் கடற்கரைவரை மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கிவருகின்றன.

இதையடுத்து, கடலில் எண்ணெய்கலந்த பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியில், இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மீட்புபணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை ஆய்வுசெய்த மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன், கடலில் எண்ணெய் கலந்தபகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள் சுமார் 40 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்து விட்டதாக தெரிவித்தர்.

மேலும், கப்பல் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, தகுந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

Leave a Reply