கமலஹாசன் புதிய தலைமுறையில் கொடுத்திருந்த நேர்கானலை சற்று முன் தான் பார்த்தேன். வழக்கம் போல் தெளிவாக பேசாமல் பசப்பும் கருத்துக்கள். தவறுகளை ஆணித்தரமாக சுட்டிக்காட்டாமல் என்ன சொல்ல வருகிறார் என்பதையே வெளிக்காட்டாமல் பூசி மெழுகும் பேச்சு. திராவிடம் அழியாது எனும் அவரது கருத்து வேடிக்கையாக இருந்தது. திராவிடம் என்பதற்கு அவர் பூகோள ரீதியான விளக்கம் தருகிறார். அதாவது அது திவ்ய பிரபந்தத்தில் இருக்கிறதாம், தமிழ்தாய் வாழ்த்தில் இருக்கிறதாம், ஆந்திரா, கர்நாடகா, என மாநிலங்களை உள்ளடக்கியதாம். திராவிடத்திற்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறதாம். அது எப்படிப்பட்ட ஒரு அடையாளம் என்பதில் அவருக்கு மிதமிஞ்சிய குழப்பம் இருப்பதை பார்க்க முடிகிறது. திராவிடன் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் கிடைக்கும் பாதுகாப்பு, தற்போது கைநழுவிப் போகிறதோ எனும் அச்சம் தெரிகிறது.

தெளிவில்லாத, முற்றிலும் குழம்பியுள்ள அவரின் பேச்சிற்கு இடையில் "பசுமாட்டை படகில் ஏற்றி சென்றிருந்தால் இலங்கை படையினர் சுட்டிருக்க மாட்டார்கள்" எனும் நக்கலும், மகாபாரதத்தில் திரௌபதியை வைத்து சூதாடும் ஒரு புத்தகத்தைதான் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம் எனும் ஏளனமும் காண முடிந்தது. சுருக்கமாக ஈவேராவின் எச்சமாக இருந்த ஒரு தலைமுறை எப்படி இப்படிப்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வார்களோ அந்த புளித்து போன வெளிப்பாடு தெரிந்தது.

மொத்தத்தில் கமலஹாசன் அச்சத்தின் முழு உருவமாக தெரிகிறார். 1960-70 களில் திராவிட ரௌடிகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட பிராமண சமூகத்தினரில் ஒரு சிலர், தங்களை வீரர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள பூனூலை களைந்தும், அசைவம் உண்டும், பகுத்தறிவு பேசியும் செயற்கையான ஒரு மாயையில் திரிந்ததாக சொல்வார்கள். அப்படிப்பட்ட கடைந்தெடுத்த‌ பேடிகளின் ஒரு அற்புதமான உதாரணம் கமலஹாசன்.

Leave a Reply