உடல் நலக் குறைவு காரணமாக பாதிக்கப் பட்டிருந்த கமலா அத்வானி டெல்லி டெய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.

பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானியின் மனைவி கமலா அத்வானி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சுவாசிப்பதில் திடீரென சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். கமலா அத்வானியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில், அவரின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. அத்வானிக்கு பலமாகவும் தூணாகவும் கமலா திகழ்ந்தார் எனக் கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply