மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் பா.ஜ.க மற்றும் கூட்டணிகட்சிகள் அமோக வெற்றிபெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பா.ஜனதா யாரையும் மிரட்டுவது இல்லை. தாழ்வு மனப் பான்மையால் சில கட்சியினர் மிரண்டு உள்ளனர். அனைத்து கட்சிகளுடன் நட்போடு இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

 

திமுக. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதும், கலைஞரை போன்று தனக்கு சிலவிஷயங்கள் இல்லை என்று கூறினார். அதை நிரூபிக்கும் வகையில் அவருடையபேச்சு அமைந்தது, துரதிருஷ்டவசமானது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கூட்டமாகவே தெரிந்தது. இது கருணாநிதிக்கு செய்த மிகப் பெரிய துரோகம். கருணாநிதியை அவமானப்படுத்தி உள்ளனர்.

 

ஒரு இரங்கல் கூட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பா.ஜனதா கட்சி நடத்திய இரங்கல்கூட்டம் உதாரணம். பா.ஜனதா கட்சியிடம் இருந்து பாடம் கற்கவேண்டும். பணமதிப்பு இழப்பு தொடர்பாக ஒரு பொய்யை திரும்ப, திரும்பசொல்லி உண்மையாக்க முடியும் என்று ராகுல்காந்தி நம்புகிறார். அது நிச்சயமாக எடுபடப்போவது இல்லை.

 

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால், பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்களும் பயன் அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசலால் மாநில அரசுகளுக்கு வருவாய்கிடைக்கிறது. எனவே, சரக்குசேவை வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டாம் என்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு அரசு தயாராக இல்லை. இடைத் தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.