இதை, ஒரு தனி மனிதனின் அயராத உழைப்பு, விடா முயற்சிக்கான சாதனை என்ற அளவில், ஒரு மைல்கல் என்று வேண்டுமானால் கூறலாமே தவிர, ஒட்டுமொத்த தமிழகமோ, தமிழினமோ, ஏன் தி.மு.க.வோ கூட மகிழும்படியான நிகழ்வல்ல என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்!
 
இன்று தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகள் எதுவாயினும், அதில் ஏதோ ஒரு பங்களிப்பை கருணாநிதி செய்திருப்பார். ஒன்று அந்த பிரச்சனைகளுக்கு வித்திட்டிருப்பார் அல்லது நீரூற்றி வளர்த்திருப்பார்! அதே போன்றுதான் தமிழினத்திற்கும், தி.மு.க.விற்கும் சேவை புரிந்திருப்பார்! காவிரி, ஊழல், தமிழ், நில அபகரிப்பு, கச்சத்தீவு, மாநில சுயாட்சி, மணல், தாது கொள்ளை, மது விற்பனை, இலங்கை என்று எத்தகைய பிரச்சனையும் அவர் கைவண்ணமின்றி சீர் கெட்டதில்லை!
 
இந்த விழா தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பெருமையையும் சேர்க்காது! இருந்தும், அது தமிழனுக்கு கிடைத்த வரம் என்ற வகையில்தான் விழா ஏற்பாட்டாளர்கள் பேசுவார்கள்!
 
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு, தள்ளாத வயதில், கொட்டும் மழையில் கோலூன்றி, முதல்வர் வீடேறிச் சென்று, "மதுக்கடைத் திறக்காதீர்" என்று கேட்டுக்கொண்ட அந்த பெரியவரை, குல்லுக பட்டர் என்று ஏளனம் செய்த கோமாளிக் கூட்டங்களைப் புரிந்து கொண்டு மக்கள் இன்று கூட்டங்கூட்டமாக சென்று, சாராயக் கடைகளை அடித்து நொறுக்குகின்றனர்! இது ஒரு சாம்பிள்தான்! 
 
இந்த கோமாளிகளின் இன்னபிற தீவினைகளைப் புரிந்து கொண்டு மக்கள் விழிப்புநிலை அடையும் நாள் வெகு அருகில்தான் இருக்கிறது!!

Leave a Reply