திண்டுக்கல்லில் BJP அலுவலகம் தாக்கப் பட்டது தொடர்பான திமுக தலைவர் கருணாநிதியின் கருத்திற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித் துள்ளார். 

மதுரையில் செய்தி யாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், வன்மு றைக்கு வன்முறை தீர்வாகாது என கருத்து தெரிவித்திருப்பது கருணாநிதி வகித்தபதவிகளுக்கு அழகல்ல என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித் துள்ளார் 

எந்த அர்த்தத்தில் இந்த வார்த்தையை பயன் படுத்தினார் என்று கருணாநிதி விளக்கம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டத்தில் யாருக்கு எதிராக எப்போது பாஜக  வன் முறையை தூண்டியது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பொறுப்புள்ள ஒருதலைவர் இப்படி பேசுவதை தயைகூர்ந்து நிறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply