தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சிதேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குபதிவுக்கு பிறகு வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பது போடப்பட்டது. தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை எண்ணும்பணி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. விடியவிடிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நேற்று பிற்பகல் வரை நீடித்தது.

 

இதனிடையே திமுக மூத்த தலைவர் கருணாநிதியின் சொந்தவார்டில் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக மூத்த தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் இருக்கிறது.

அவர் பிறந்துவளர்ந்த வீடு அங்கிருக்கும் 5 வது வார்டில் அமைந்துள்ளது. அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அங்கு பாஜக வேட்பாளர் அரவிந்தன் என்பவர் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் தோல்வியை சந்தித்துள்ளார். கருணாநிதியின் சொந்த வார்டிலேயே பாஜக வென்றிருப்பது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

One response to “கருணாநிதியின் சொந்த வார்டை பிடித்த பாஜக”