சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள கருப்பு பணத்தை இந்தியா மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது. கருப்புபணம் தொடர்பாக தானாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் புதியசட்டம் ஒன்றை அந்நாடு கொண்டுவர முடிவுசெய்திருக்கிறது. உலக அளவில் கணக்கில் காட்டப்படாமல் வங்கிகளில் பதுக்கப் படும் பணத்துக்கு எதிரானதாக இந்தசட்டம் அமையும். இதை உருவாக்குவதில் சுவிட்சர்லாந்து தீவிரமாக ஈடுபட்டுஉள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிடும்.

இந்த சட்டம் அமலுக்கு வரும்வரை இந்திய அரசுடன் 2014-ம் ஆண்டு செய்து கொண்டுள்ள ஏற்பாட்டின்படி, கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் தொடர்பாக இந்தியா அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு வங்கிகளில் கணக்குவைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நமக்கு அளிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி சுவிட்சர்லாந்து நாட்டின் டவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அங்கு சுவிட்சர்லாந்து நிதிமந்திரி யுலி மவுரெரை அவர் சந்தித்துபேசினார். அப்போது இருதரப்பிலும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.பின்னர் அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியது:-

Leave a Reply