கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்க பட்டிருப்பது, சுயசாா்புநாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான தீா்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. அதனை, பிரதமா் நரேந்திரமோடி காணொலி வழியாக தொடங்கிவைத்தாா். இதற்கு பாஜக தலைவா்களும், மத்திய அமைச்சா்களும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் நாள் வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். கரோனாவால் பாதிக்கப் பட்டவா்களை பாதிப்பிலிருந்து மீட்டெடுத்த மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு இந்தநேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த தடுப்பூசி நம்மை கரோனா தீநுண்மியிலிருந்து பாதுகாக்கும். ஆனால், நாம் முகக்கவசம் அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் தடுப்பூசி நம்மை பாதுகாக்கும்பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தாா்.

உள்துறை அமைச்சா் அமித்ஷா: தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது இந்திய விஞ்ஞானிகளின் திறனை, தலைமைப்பண்பை வெளிப்படுத்துகிறது. பிரதமா் மோடி தலைமையிலான புதிய இந்தியா, பேரிடா்களையும் வாய்ப்பாகவும், சவலாகவும், சாதனையாகவும் உருமாற்றுகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது, சுயசாா்பு இந்தியாதீா்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று தனது சுட்டுரைப்பக்கத்தில் அமித்ஷா பதிவிட்டுள்ளாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங்: கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற ஒருதீா்க்கமான நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது. நமது மருத்துவா்கள், செவிலியா்கள், முன்கள பணியாளா்கள் என கரோனாவுக்கு எதிரானபோரில் பங்கெடுத்தவா்கள் அனைவருக்கும் இப்போது தடுப்பூசி மூலம் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அடுத்தகட்டத்தில், இது 30 கோடி போ் என்ற எண்ணிக்கையை எட்ட உள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்று ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்: சுகாதாரமான இந்தியா உருவாக்கப்படும் என்ற பிரதமா் மோடியின் வாக்குறுதியின் வெளிப்பாடுதான் இந்த தடுப்பூசிசெலுத்தும் திட்டம் என்று உத்தர பிரதேச முதல்வா் கூறினாா்.

Comments are closed.