கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக சார்பில், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் படுவதை தமிழக பாஜக ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. சுமார் ஒருலட்சம் தமிழர்கள் கர்நாடக எல்லைகளை கடந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருக் கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில்வாழும் கன்னடர்கள் மீது எந்தத்தாக்குதலும் நடத்தப்படவில்லை. அவர்கள் இங்கு பாதுகாப்பாக உள்ளனர். தமிழர்கள் இங்கு பெருந்தன் மையாக நடந்து கொள்கிறார்கள்.

கர்நாடகத்தில் ஒரு சில கட்சிகளே கலவரத்தை தூண்டிவிடுகின்றன. இரண்டு மாநில மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சிசெய்து வருகிறார். தேச ஒற்றுமையை பாதுகாக்க பாஜக தொடர்ந்துபாடுபடும்.
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றார் அவர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply