கர்நாடகாவில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது’ என்று பிரதமர் நரேந்திரமோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் அடுத்தமாதம் 12-ஆம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகி களிடையே நமோசெயலி (Na MO app) மூலம் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் முழு பெரும்பான்மையுடைய அரசு அமைந்தால் மட்டுமே, மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், பாஜக தலைமையில் மத்தியில் முழு பெரும்பான் மையுடைய அரசு அமைந்தது. இதன் காரணமாக, இந்தியாவின் பெருமை உலகளவில் பேசப்படுகிறது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக, மாநிலத்தில் தொங்கு சட்டப் பேரவை அமையும் என தகவல்கள் பரப்பப்படுகின்றன.  ஜாதி மற்றும் மத ரீதியாக கர்நாடகாவை பிரித்தாள அக்கட்சி முயற்சிக்கிறது.

காங்கிரஸ், குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பொய்யான வாக்குறுதிகளை லாலிபாப்போல் கொடுக்கிறது. அடுத்த தேர்தலில் வேறொரு சமுதாயத்திற்கு இதேபோல் லாலிபாப்கொடுக்கிறது.

தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுபோயுள்ள காங்கிரஸ் பொய்களைப் பரப்பிவருகிறது. முன்பு காங்கிரஸ் 50 விஷயங்கள் குறித்துப் பேசினால், அதில் 5 – 10 விஷயங்கள் பொய்யானவையாக இருக்கும். தற்போது, அந்த 50 விஷயங்களில் 40 – 45 விஷயங்கள் பொய்யா னவையாக உள்ளன. எஞ்சிய 5 விஷயங்கள் தெளிவற்றவையாக இருக்கும் என்றார் மோடி.

Leave a Reply