கர்நாடகாதேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக. 97 இடங்களைபெற்று அதிக தொகுதிகளை வென்றகட்சியாக உயர்ந்துள்ளது. மேலும் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் முன்னிலைவகித்து வருகின்றனர்.
 

இந்நிலையில், இந்ததேர்தலில் பாஜக. வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர்மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றுமாலை அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘வளர்ச்சி என்னும் பாஜக.வின் கொள்கையை தொடர்ந்து ஆதரித்துவரும் கர்நாடகா மாநில சகோதர, சகோதரிகள் இந்ததேர்தலில் மிக அதிக இடங்களைபெற்ற கட்சியாக பா.ஜ.க.வுக்கு வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

இரவு பகல்பாராமல் தேர்தல் பணியாற்றிய பாஜக. தொண்டர்களின் சிறப்பான உழைப்புக்கு தலை வணங்குகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply