காவிரியில் தண்ணீர் திறக்கவேண்டும் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல்செய்த மறுசீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த செப்., 20ம் தேதி காவிரியில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்தும், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க படக் கூடாது எனவும் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மனுதாக்கல் செய்தது.இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் செப்டம்பர் 20ம்தேதிக்கு பிறகு பலஉத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடக வழக்கை விசாரிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply