கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு கர்நாடக அரசு உரியபாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சுசீந்திரத்தில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி பிரச்னையில் கர்நாடகஅரசு தேவை இல்லாமல் மொழி தீவிரவாதிகளை தூண்டி விடுவதாக தெரிகிறது.  கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு கர்நாடக அரசு உரியபாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழர்கள் தாக்கப்பட்டு வருவது அதிர்ச்சிஅளிக்கிறது. தண்ணீர் விவகாரத்தில் அந்தமாநில அரசே போராட்டத்தை தூண்டுகிறது.

இது இருமாநிலங்கள் சம்மந்தப்பட்ட பிரச்னை என்பதால் பொதுமக்கள் புரிந்துகொண்டு இது போன்ற போராட்டங்களை தவிர்ப்பது நல்லது. காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழக அரசு சரியான அணுகு முறையை கையாண்டு வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது என்பது காலத்தின் சூழ்நிலை கருதி தேவையான நேரத்தில் தமிழகஅரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply