கறுப்புப் பணத்தை ஒழிக்கும்வகையில் அரசு எடுத்துள்ள 'நோட்டு' நடவடிக்கை நல்லமுயற்சி எனவும், நாட்டு மக்கள் அனைவரும் மோடியின் முயற்சிக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

மும்பையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அமீர்கான், ''நோட்டு நடவடிக்கைகளால் நான் எந்தப் பிரச்சனைகளையும் சந்திக்க வில்லை. நான் முறையாக வரி கட்டுபவன். ஏதாவது வாங்க வேண்டும் என்றால் டெபிட் கார்டையோ அல்லது கிரெடிட்கார்டையோதான் பயன்படுத்துகிறேன். அதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

யாரிடமெல்லாம் கறுப்புப்பணம் உள்ளதோ, அவர்களே பிரச்சினைகளைச் சந்திப்பார்கள். நம்முடைய பிரதமர் நரேந்திரமோடி நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளார். அவரின் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம் சிரமங்களை எதிர்கொள்ளும் பொதுமக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது'' என்று கூறினார்.

Leave a Reply