கறுப்பு பணத்துக்கு எதிரான போர், அதை முழுமையாக ஒழிக்கும்வரை தொடரும், சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் எந்தப் பிரச்சினையிலும் எப்போதும் இணைந்து செயல் பட்டதில்லை. ஆனால் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் என்னை எதிர்க்கும் விஷயத்தில் மட்டும் இவ்விரு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

மோடியை மாற்றவேண்டும், மோடியை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்கின்றனர். ஆனால் உங்கள் நோட்டுகளை மாற்றுங்கள் கறுப்புப்பணத்தை நீக்குங்கள் என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்.

கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சியாலும் குடும்ப சண்டையில் சிக்கியுள்ள கட்சியாலும் மாநிலத்தை காப்பாற்ற முடியுமா என்று நீங்கள் தான் (பொது மக்கள்) முடிவு செய்யவேண்டும்.

கடந்த 14 ஆண்டுகளாக இங்கு பாஜக ஆட்சியில் இல்லை. இதனால் பாஜக மட்டுமல்ல வளர்ச்சியும் இங்கு ஏற்பட வில்லை இல்லை. எனவே, பாஜக.,வால் மட்டும்தான் மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதை நீங்கள் உணரவேண்டும்

சாதி மற்றும் குடும்ப அரசியலை மக்கள் ஏற்கெனவே பார்த்துவிட்டனர். எனவே, இந்தமுறை சாதி அடிப்படையில் வாக்களிக் காதீர்கள். வளர்ச்சி ஏற்படவேண்டும் என்ற நோக்கத்துக்காக வாக்களியுங்கள். அதன்பிறகு பாருங்கள் மாநிலம் வளர்ச்சி அடைகிறதா இல்லையா என்று.

உ.பி.யில் இப்போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சிக்குவந்தால் பொதுமக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியும்.வறுமையை நாட்டை விட்டு விரட்ட விரும்புகிறேன். நாட்டு மக்களுக்கு தரமான கல்வி மற்றும் சுகாதார வசதியை வழங்க விரும்புகிறேன். இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.

கறுப்புப் பணம் மீட்கப்பட்டால் அவை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தேன். இதை நிறைவேற்றும் வகையில், ஏழைகள், விவசாயிகள், கர்ப்பிணி களுக்காக சிலதிட்டங்களை அறிவித்துள்ளேன். இதற்கு இடையூறு ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதே இதற்குக்காரணம்.

ஆனாலும் கறுப்புப் பணத்துக்கு எதிரான போர், அதை முழுமையாக ஒழிக்கும் வரை தொடரும். அதற்கு உ.பி.மக்களின் ஆதரவு தேவை. இங்கு பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

பாஜக நிர்வாகிகள், தொண்டர்களைப் பொருத்தவரை வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாகசெய்ய வேண்டும். ‘நம் அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைவோம்’ என்ற நமது குறிக்கோளை மனதில் கொண்டுசெயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply