மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலைசாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களின் அலுவலகப்   பத்திரிக்கைச் செய்தி

மாண்புமிகு மத்திய நெடுஞ்சாலை, சாலைப்போக்குவரத்து மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தி.மு.க பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான திரு. கலைஞர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்ததார்.
 
திரு. கலைஞர்  அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்ததை அடுத்து அவர் பூரண நலம் பெற எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை தான் பிரார்த்திப்பதாக அமைச்சர் திரு.பொன்.இராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply