நாட்டில், 65 சதவீத மக்கள், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவை உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. புதிய திறமைகளையும், அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரும் குறிக்கோளை பெரியதாக எண்ணுங்கள். மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களும் தொடர்ந்து கற்கவேண்டும். நாட்டில் உள்ளவர்கள் அனைவரும், அவரவர் கடமையை செய்தால், இன்னும் 15 ஆண்டுகளில், உலகபொருளாதாரத்தில், முதலிடத்தை இந்தியா பிடிக்கும்.

தகவல் தொழில் நுட்பத்தை படிப்பில் மட்டுமல்ல, மக்கள் வாழ்க்கைக்கும் கொண்டு வர வேண்டும். அனைத்தும் ஆன்லைனில் கொண்டு வந்தால், மக்கள்வரிசையில் நிற்க வேண்டியது இருக்காது. சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே குற்றத்தை தடுத்துவிட முடியாது. மாற்றம் மக்களிடம் வரவேண்டும்; கல்வியில் மாற்றம் வேண்டும்; பெண்களை மதிக்க சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும்.

வீட்டிலும், தாய்மொழியை புரிந்துகொள்ளும் இடங்களிலும், தாய்மொழியையே பேசுங்கள். தாய், பிறந்த மண், தாய்மொழி, தாய்N நாடு, குரு ஆகிய ஐந்தும் வாழ்க்கையில் முக்கியம்.

இந்தியாவில் தாய் மொழியில், அனைத்து பாடங்களையும் கற்பிக்கவேண்டும். இந்தியா ஒரேநாடு என்ற எண்ணம் வேண்டும். கற்கும்நேரத்தை தவிர சமூகத்தை பற்றி அறிந்துகொள்ள நேரத்தை செலவிடுங்கள். கிடைக்கும் நேரங்களில் கிராமங்களுக்கு சென்று கல்விகற்பியுங்கள்.

துாய்மை இந்தியாவை உருவாக்குவதற்கு எண்ணுங்கள். இந்தியாவின் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் பேணிகாப்பது இளைஞர்களின் கடமை.

புதுச்சேரி பல்கலைக் கழகத்துக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று வருகை தந்தார். பல்கலைக் கழக துணை வேந்தர், குர்மீத் சிங் மற்றும் டீன்களுடன், பல்கலைக்கழக வளர்ச்சிகுறித்து கலந்துரையாடினர். பின்னர் பல்கலைக்கழக நேரு கலையரங்கில், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியது:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *