'10 ஆண்டுகளுக்குபின் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்கள் மாநாட்டினை கூட்டி உள்ளார். அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மிகுந்த வருத்த மளிக்கிறது.

தீவிரவாதிகள் கொடைக்கானல் மலைப்பகுதியை பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்துவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனால், காவல்துறை கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும் புகார்கள்வந்துள்ளன. இதுகுறித்தும் அரசு கண்காணிக்க வேண்டும்.

மலை கிராமங்களில் ஆரம்ப சுகாதாரநிலையம், முதியோர்களுக்கான பென்சன்தொகை பெறுவதற்கும் வசதி செய்துதர வேண்டும். கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் இத்தகைய கிராமங்களா???? அதிகாலை ஆயிரம் பெண்கள் வெளியிட கழிப்பிடங்களுக்கு செல்ல வேண்டும்……களிப்படைந்து கொண்டிருக்கும ஒர் சமூகம் கழிப்பிடம் இல்லாமல் ஒரு சமூகம்்….தமிழகத்தை ஆண்டவர்கள மன்னிக்க முடியாதவர்கள்….ஆனால ஆறுதல் என்ன என்றால் கழிப்பிடதேவையை வலியுறுத்தும் ஓர்பிரதமர் நமக்குக்கிடைத்திருக்கிறார…

திறந்தவெளி கழிப்பிடத்தை உபயோகிப்பது சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளது.அதனால், தமிழக அரசு இதுகுறித்து 3 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்."தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்
கொடைக்கானல் மலைவாழ மக்களும தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும வில்பட்டி என்ற பஞ்ஞாயத்தில்

Leave a Reply