மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, இத்தா லியில் இருந்து தான் வழி நடத்தப்பட்டது என்று பாஜக தலைவர் அமித்ஷா விமர்சனம் செய்தார்.

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, பரக் பள்ளத்தாக்கு பகுதிக்கு உள்பட்ட இரண்டு இடங்களில் நேற்று பிரசாரம் செய்த போது அவர் பேசியதாவது:

அஸ்ஸாமில் பாஜக அரசு அமைந்தால், அதை ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அப்படியானால், மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எப்படி இயங்கியது? அது இத்தாலியில் இருந்து தான் வழிநடத்தப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா இங்கு பிரசாரம் செய்த போது, அஸ்ஸாம் மாநில வளர்ச்சியை அவர்களது கட்சி உறுதிசெய்யும் என்று கூறுகிறார். கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்திலும், 10 ஆண்டுகளாக மத்தியிலும் ஆட்சிசெய்தபோது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்?

ஊழலில் முதல் மாநிலமாக அஸ்ஸாம் உருவெடுத்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவுபவர்களைத் தடுப்பதில் முதல்வர் தருண்கோகோய் அரசு தோல்வி அடைந்திருக்கிறது என்றார் அமித் ஷா.

Leave a Reply