உ.,பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்ட சபை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்துகூறியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், இது மோடியின் கறுப்புபண ஒழிப்புக்கு கிடைத்தவெற்றி என்று கூறியுள்ளார். காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகி யிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்துமாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தர பிரதேசத்தில் மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது.5 மாநிலங்களிலும் நாங்கள் தான் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சிய மைக்கிறது. பஞ்சாபில் குறிப்பிடத் தகுந்த அளவிற்கு வாக்குகள் பெற்றிருக்கிறோம். மணிப்பூரிலும் வெற்றிகிடைக்கும்.

நாடுமுழுவதும் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியிருக்கிறது. காங்கிரஸ் இல்லா பாரதம் உருவாகியிருக்கிறது   உத்தரபிரதேசத்தில் தொங்கு சட்டசபை வரும் என்று சொன்னார்கள். ஆனால் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என கூறினார்

Leave a Reply