தாமஸ் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், அதன் முடிவில் பாரதம் தான் உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது என்று ஒரு கருத்தை கூறியது..!

உடனே ராகுல் இதை பெரிய அளவில் பிரச்சாரம் செய்தார். வழக்கம் போல மீம்ஸ் போராளிகள் களமிறங்கி மோடியை விமர்சிப்பதாக எண்ணி, தேசத்தை சிறுமைப் படுத்துகின்றன..!

உண்மை என்னவென்றால்

இது தகவல்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையோ, புள்ளி விவரங்கள் அடிப்படையில் கூறப்பட்ட தகவலோ அல்ல.

உலகெங்கிலும் இருந்து 548 நபர்களை இந்த அமைப்பு தொடர்பு கொண்டது. அவர்கள் கல்வியாளர்கள், என்.ஜி.ஓ.க்கள் போன்றவர்கள்.
அவர்களிடம் உங்கள் கருத்து என்ன என்று கேட்டு அந்த 548 நபர்களின் கருத்துக்களை மட்டுமே வைத்து நமது தேசத்தை இழிவுபடுத்தும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்,
மிகவும் முக்கியமானது. இந்தியாவில் இருந்து 43 நபர்களை மட்டுமே கருத்து கேட்டு இந்த அவதூறை பரப்பியுள்ளது.

இந்த அமைப்பின் ஸ்பான்சர்ஷிப் யாரெல்லாம் என்று பார்த்தால் வேர்ல்ட் விஷன் மிஷிநரி எல்லாம் பட்டியலில் உள்ளது.

இதை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த அமைப்பு மற்றும் அந்த அவதூறு செய்தியை பரப்பிய இந்திய ஊடகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் நோக்கம் மத்திய அரசு பெண்களுக்கு, ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு என்று சிறப்பான பல திட்டங்களை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நற்பெயரை கெடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி வகையறாக்கள் கேம்பிரிட்ஜ் அனாலடிகா நிறுவனம் போன்றவை துணை கொண்டு விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது.

உண்மை நிலவரம்.

❣️உலக அளவில் கற்பழிப்பு அதிகம் நடப்பது அமெரிக்க ஆப்ரிக்க நாடுகளில் தான்.

❣️முதல் இடம் தென் ஆப்ரிக்கா. அமெரிக்கா 11வது இடம்.

❣️நமது நாடு இவற்றை ஒப்பிடும் போது பட்டியலிலேயே இல்லை.

❣️அமெரிக்க வாஷிங்டனில் நான்கில் ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்.

❣️ஒரு லட்சம் பெண்களில் எத்தனை பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கீழ்க்காணும் வகையில்

❣️36 பேர் அமெரிக்காவில்
❣️35 பேர் இங்கிலாந்தில்
❣️24 பேர் பிரேசிலில்
❣️17 பேர் பிரான்ஸில்

இந்த பட்டியலில் 5 பேர் என்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை மிகவும் குறைவாகவே உள்ளது.

ஆதாரங்கள் கமெண்ட் பாருங்க..!

நன்றி – இல கருப்பசாமி ஜி

Leave a Reply