கேரளாவில் வருகிற 2–ந் தேதி உள்ளாட்சிதேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இணையாக இம்முறை பாஜக.,வும் பிரசாரகளத்தில் கலக்கி வருகிறது.

மத்திய அமைச்சரும் , கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி.யுமான பொன். ராதாகிருஷ்ணன் கேரளாவில் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் செய்துவருகிறார்.

திருவனந்தபுரம் கரமனையில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:–

நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்றபின்பு பல்வேறு வளர்ச்சி பணிகள் வேகமாக நடக்கிறது. பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. இதனால் கேரளாவில் பாஜ கூட்டங்களுக்கு மக்கள் பெரும்அளவில் வருகிறார்கள்.

இங்கு கூடி இருக்கும் நீங்களே இதற்குசாட்சி. உள்ளாட்சி தேர்தலில் இதுவரை பதவிவகித்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் பலரை 5 ஆண்டுகளாக பார்க்க வில்லை என வார்டுமக்கள் தெரிவித்தனர்.

தேர்தலுக்கு மட்டுமே மக்கள் முன் காட்சிஅளிக்கும் அவர்கள் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்கள். இதை மக்கள் புரிந்துகொண்டனர். உள்ளாட்சி தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் பலர் வெற்றிபெறுவது உறுதி.

அடுத்து நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் கேரளாவில் தாமரைமலர்வது நிச்சயம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply