காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி இளவரசர்கள், உ.பி.,யை சீரழிக்கநினைப்பதாக பா.ஜ., தலைவர் அமித் ஷா கூறினார்.

 

சட்டசபை தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தலைவர் அமித்ஷா மீரட்டில் பேசியதாவது:
முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரதுகூட்டணி கட்சியின் தலைவரும், உ.பி.,யில் சட்டம் ஒழுங்கு நிலை மோசம் பற்றி விளக்கமளிக்க வேண்டும். அவர்கள் மாநிலத்தை வளர்ச்சிபாதைக்கு எடுத்து செல்லவில்லை. இருவரும் நாட்டை கொள்ளையடித்தவர்கள்.


தற்போது அவர்கள் ஒன்று சேர்ந்து உ.பி.,யை சீரழிக்க பார்க்கின்றனர். இந்தமுறை மக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்கவேண்டும். சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியை மாறிமாறி ஆட்சியில் அமர்த்துவதை தவிர்க்க வேண்டும். பா.ஜ., ஆட்சிக்குவந்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை பாதுகாக்கப்படும். விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் எனக்கூறினார்.

Leave a Reply