ரபேல் ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் தலைவர் பொய் சொகிறார். நாட்டுமக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார். இதற்காக அவர், மக்களிடமும், முப்படையினரிடமும் மன்னிப்புகேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பானது உண்மைக்கு கிடைத்தவெற்றி. இதன் மூலம், காங்கிரஸ் முகத்தில் அறையப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் திருப்தி அடைந்துள்ளது. மத்தியஅரசு யாருக்கும் சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்பதை தீர்ப்பு வெளிக்காட்டுகிறது.

தேசிய பாதுகாப்பை ஆபத்தில்தள்ள முயன்றதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரிடம் சிலகேள்விகளை கேட்க விரும்புகிறேன். எந்த தகவல் அடிப்படையில் ஒப்பந்தம் குறித்து குற்றச்சாட்டுகளை சொல்லிவருகிறார். அவருக்கு எங்கிருந்து தகவல் கிடைக்கிறது. ஐ.முற்போக்கு கூட்டணி அரசில் ஒப்பந்தத்தை இறுதிசெய்வதில் தாமதம் ஏற்படுத்தியது ஏன்? ரபேல் ஒப்பந்தமானது அரசுக்கும் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம். இதில் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது. இந்தியாவின் கூட்டாளியை மத்தியஅரசு முடிவு செய்யவில்லை. இந்திய விமானப்படைக்கு நவீனவிமானங்கள் தேவைப்படுகிறது. அமித்ஷா பாஜக தேசியத் தலைவர்.

Leave a Reply