காங்.,ஆட்சியில், ஊழல் செய்வதில், அமைச்சகங்கள் இடையே போட்டி இருந்தது. ஆனால், பா.ஜ.க , ஆட்சி யில், வளர்ச்சிபணிகளில் போட்டி உள்ளது,

சர்வதேச தரவரிசை பட்டியலில், இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில், உலகளவில், சுற்றுலாவில், இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது.

 

தனிநபர்கள் இடையே, ஊழல் மற்றும் தாமதம்செய்வதில் போட்டி இருந்தது.நிலக்கரி, ஸ்பெக்ட்ரம், பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அதிகபணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக,யார் அதிகமாக, வேகமாக ஊழல்செய்வது என்ற போட்டி இருந்தது.

இதில் முக்கிய பங்காற்றியது யார் என்பது, அனைவருக்கும் தெரியும்.ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதில், போட்டி ஏற்பட்டுள்ளது.

சாலைகள் இணைப்பு,வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு, 100 சதவீத சுகாதாரம், 100 சதவீத மின் வசதி ஆகியவற்றை நிறைவேற்றுவதில் போட்டி உள்ளது.இலக்குகளை அடைவதிலும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலும், அமைச்ச கங்கள், மாநிலங்கள் இடையே, போட்டி நிலவுகிறது.

சில விஷயங்கள், இந்தியாவில் சாத்தியமற்றவை என, தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால், 2014 முதல், இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி மூலம், 130 கோடி மக்கள் முன், சாத்திய மில்லாதது ஏதும் இல்லை, என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஐந்தாண்டுகளில், பொருளாதாரவளர்ச்சி, 7.4 சதவீதமாக உள்ளது. பண வீக்கம், 4.5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த காலத்தில், தொழிற்புரட்சிக்கான வாய்ப்பை, நாம் தவறவிட்டோம். தற்போது, நான்காவது தொழிற்புரட்சியில், இந்தியாவின் பங்கு இருக்கிறது.

டில்லியில் நடந்த, சர்வதேச பொருளாதார மாநாட்டில், பிரதமர் மோடி பேசியது

Leave a Reply