காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடைவந்தது. இதற்கு காங்., கட்சி , மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். தற்போது அலங்காநல்லூர் போராட்டகளமாக மாறியுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்வார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமானவர்களை திமுக கண்டிக் காதது ஏன் ? காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோது தான் இந்த தவறு நடந்தது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரியவேலைகளை செய்யாமல் போராட்டம் நடத்துவதால் என்ன பயன் ?

தமிழ் மக்கள் கோரிக்கை போராட்டம் அல்ல. அரசியல் கட்சிகள் வரவேண்டிய இடம் அலங்காநல்லூர் அல்ல. டில்லியில்தான் இருக்கிறது. பார்லி.,யில் செய்தது என்ன , கோர்ட்டில்செய்தது என்ன என்பது குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என நான் நம்புகிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடைவந்தது. இதற்கு காங்., மக்களிடம் பகிரங்க மன்னிப்புகேட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவது என்பதுதான் எல்லோரது விருப்பம். இது தற்போது கோர்ட்டில் இருக்கிறது. நல்ல தீர்ப்பு வரும்.

.

Leave a Reply