காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க தீவிரநடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

தேனிமாவட்டம் போடி அருகே குரங்கணியில் கல்லூரி மாணவிகள் 27பேர் மலையேறும் பயிற்சியில்ஈடுபட்டனர்.

அவர்கள் கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வனப் பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது.

இதில் மாணவிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த அருகிலுள்ள ஊர்மக்கள், வனக் காவலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மாணவிகளை மீட்க, விமானப் படைக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். இரவு நேரத்தில் மீட்புபணிகள் கடினம் என்றும்   15 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும்   தெரிவித்துள்ளார். .

 

Leave a Reply