தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர டி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி நினைவிடத்தில், மதநல் லிணக்க பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாடகர்கள் குழு பக்திபாடல்களை பாடினர்.

பாஜக. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்ரிரி ராவ் இந்தர்ஜித் சிங், முப்படை தளபதிகளான சுனில்லம்பா, பி.எஸ்.தனோவா மற்றும் பிபின் ராவத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் காந்தி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இன்று காலை 11 மணியளவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply