ஆஃப்கானிஸ்தானில் இன்று யார் தலைமையில் அரசு அமையப் போகிறது என்கிற அறிவிப்பு வெளியிட ஆயத்தமாகி வந்த நிலையில் தற்போது அவர்களுக் குள்ளாகவே அடித்து கொள்ளும் நிலை அங்கு உருவாகி இருக்கிறது.

நம் முந்தைய பதிவில் பார்த்ததுபோல் ஆஃப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வரும் இயக்கம் அக்கானி நெட்வொர்க் எனும்பெயரில் இயங்கும் ஒரு குழு.நம் ஊர் அரசியலில் திராவிடகட்சிகளை போல இவர்கள் அனைவரும் தாலிபான்கள் என்று உலகம் அழைத்தாலும்…. இவர்கள் இருவருக்கும் இடையே மெல்லிய விரிசல் ஆரம்பம் காலம் தொட்டே நிலவுகிறது.திக, திமுக, அதிமுக போல…..
பொதுவாக தாலிபான்கள் கருத்தரித்து. உருக்கொண்டது பாகிஸ்தான் என்றபோதிலும் ஷியா பிரிவு மற்றும் ஸன்னி பிரிவு முஸ்லிம்கள் இடையேநிலவும் பிணக்கு தாலிபான் இயக்கத்திலும் உண்டு.

இதில் பண்டுஷ் இனத்தை சேர்ந்தவர்கள் தாலிபான்களாக பெருவாரியாக உள்ளனர்.இவர்கள் பாகிஸ்தான் ஆதரவுநிலைப்பாட்டை கொண்டவர்கள். இவர்களின் தலைவர் முல்லா ஓமர்.

ஆனால் தற்போது காபூலை கைப்பற்றியது இவர்கள் அல்ல. அது அக்கானி நெட்வொர்க். இவர்கள் சிறுபான்மையினர்….. இனத்திலும், அளவிலும்…… இவர்கள் வசம்தான் இன்று ஆஃப்கானிஸ்தானின் நிதி வளங்கள்…. நிர்வாக ரீதியான கட்டிடங்கள் ஆகிய அனைத்தும் இருக்கிறது. இவர்களுக்கு அரசியல் அமைப்புக்கள் மீது பிடிமானம் உண்டு. சரியாக சொன்னால் நாட்டை அரசியல் அமைப்புக்கள் மூலமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள்…. கொஞ்சம் படித்தவர்கள்…. நாகரிகம் அறிந்தவர்கள்…..

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை சார்ந்துஇயங்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். ஆதலால் தான் டோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா சார்பில் கத்தார் தூதரக அதிகாரி கலந்து கொண்டார்.

இது ஒன்று போதாதா…… மேற்படி நபர்களுக்கு…… குதித்து கொண்டு இருக்கிறார்கள்…. அக்கானி நெட்வொர்க் காபூலை விட்டு வெளியேற வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்…. பொருத்தது போதும் பொங்கி எழுமனோகரா பாணியில் அக்கானி நெட்வொர்க்கை சேர்ந்தவர்களும் இயங்க ஆரம்பித்து விட்டனர்…..
இது ஏகத்துக்கும் மற்ற பகுதிகளில் உள்ள தாலிபான்களை உசுப்பி விட்டு உள்ளது.
ஆஃப்கானிஸ்தானின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தலைநகர் காந்தகார் தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள்…. அதாவது இவர்கள் தலைநகரை காந்தகாருக்கு மாற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் இவர்களால் காந்தகாருக்குள் உள் நுழைய முடியவில்லை…. அந்த அளவிற்கு எதிர்ப்பு பலமாக இருக்கிறது. அங்கு உள்ள மக்கள் குறிப்பாக பெண்கள் அக்கானி நெட்வொர்க் பிரிவினை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். காரணம் அவர்கள் வெளிப்படையாக இந்தியாவை ஆதரிப்பதால் இவர்களும் அவர்களை ஆதரிக்கிறார்கள். இது பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

இதனை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் மற்றும் அதன் ஊடாக இயங்கும் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு தாலிபான்கள் கொண்டுவந்து கொடுத்த ஆயுதங்களை சீனா விலை பேசி வாங்கி இருக்கிறது. அதற்கான முழு தொகை கொடுக்கப்படாத நிலையில் அந்த பணத்தை நிறுத்தி வைத்துவிட்டது. இது பாகிஸ்தானை சங்கடத்தில் தள்ளி இருக்கிறது.

தாலிபான்களுக்கோ ஆரம்பமே வெறுப்பு தட்டி விட்டது. கொடுத்த ஆயுதங்களை திருப்பி தர கேட்கிறார்கள்… அல்லது பணம் தர சொல்லி வற்புறுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த இரண்டுமே பாகிஸ்தான் கைகளில் இல்லை.

சீனாவோ பாகிஸ்தானை….. திட்டம்போட்டு கொடுத்த வேலையை செய்யாத உனக்கு பணம் எதற்கு என்று ஏகடியம் பேச ஆரம்பித்து விட்டது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளை இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு விஷயத்தில் பங்கு கொள்ள அழைத்திருக்கிறார். அதற்கு ஆதரவும் தெரிவித்து இருக்கிறார். நன்கு கவனியுங்கள்…… ஐரோப்பிய ஒன்றியநாடுகளை அல்ல…… ஐரோப்பிய நாடுகளை…….
இந்த இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறி விட்டது நினைவிருக்கலாம்.
ஆனால் இவர் காய் நகர்த்துவது அதற்கு அல்ல…. பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி மற்றும் பிரிட்டனை முழுவதுமாக இணைந்தார் போலான கூட்டு இது.

அமெரிக்காவிற்கும் பிரெட்டனுக்கும் ஆஃப்கானிஸ்தான் விஷயத்தில் முட்டிக் கொண்டு இருக்கிறது….. தங்களை கேட்காமல் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஜோபைடன் முடிவு எடுத்து ஆஃப்கன்படை விலகலை அறிவித்து விட்டார். இதனால் பல விதங்களில் தங்களுக்கு நீண்ட கால நோக்கில் பாதிப்பு இருக்கும் என்று நினைக்கிறது மேற்படி நாடுகள்.
சரியாக சொன்னால் இன்று இல்லாவிட்டாலும் நாளை சீனா இங்கு தனது செல்வாக்கை நிலை நிறுத்தி விடும்.அங்கிருந்தபடியே தங்கள் நாட்டு பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை நசுக்கி பணியவைத்து விடும் என்கிறார்கள்.
இந்த இரண்டு சமாச்சாரங்களை கண கச்சிதமாக கையாண்டு இந்தியா காய் நகர்த்தி வருகிறது. இதற்கு ஆஃப்கானிஸ்தானில் அமைய உள்ள அரசியல் அமைப்புக்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். தங்களுக்கு பாதுகாவலனாக…. வழிநடத்தும் தோழனாக… இந்தியா இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். சீனாவை போல கடனுதவி என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்வதை தவிர்க்க இதுவேசரியான பதம் என்பதாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதில் வேறோர் சமாச்சாரமும் உண்டு. பாகிஸ்தான் ஆதரவு தாலிபான்கள் தலைவராக பொறுப்பு வகிக்கும் முல்லா ஓமர் தீவிரவாதியாக ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட நபர் என்பதால் அவர்கள்.. அதாவது அக்கானி நெட்வொர்க் பிரிவினர் அவரை தவிர்க்க பார்க்கிறார்கள். இவரோ இது ஜிகாத் எனும் ஒற்றைசொல்லில் அதனை அடக்கி ராணுவ மட்டத்தில் இருப்பவர்களையே ஆஃப்கானிஸ்தானை ஆள சரியான நபர் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

அதனால் இன்று அறிவிக்க இருந்த ஆட்சி மன்ற குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான அறிவிப்பு தள்ளிப் போட வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது அங்கு. மொத்தத்தில் இப்படியும் புரிந்து கொள்ளலாம்.

ஆஃப்கானிஸ்தானில் அரசு காபூலில் இருந்தா அல்லது காந்தகாரில் இருந்தா….. என்பதை கொண்டே நாம் பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

ஆக மொத்தத்தில் அங்கும் ஒரு தர்ம யுத்தம் நடத்திவிட்டு தான் அவர்கள் அடங்குவார்கள் போல் தெரிகிறது 😀

இது எதுவுமே சரியாக தெரியாத சில பித்துக்குளிகள், தாலிபான்கள் காஷ்மீரில் கால் பதிக்க தருணம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று செய்தி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

Comments are closed.