கால்நடைகளை காக்கவும், விவசாயிகளின் நலனை பாதுக்காகவுமே, மாட்டிறைச் சிக்கான தடைஉத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியவர், சந்தைகளில் மாடுவிற்க சில விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக கூறினார். மாட்டிறைச்சி சாப்பிடகூடாது என யாரும் சொல்லவில்லை என்று கூறிய பொன். ராதா கிருஷ்ணன், கால்நடைகளை காப்பாற்றும் நடவடிக்கையை, மதத்தோடும் , அரசியலோடும் ஒப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புவது, சந்தர்ப்பம்கிடைக்கும் போது அரசியல் ஆதாயமாக மாற்றுவதும் தமிழகத்தில் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். கருணாநிதியின் வைரவிழா, அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் நடத்தப்படுவதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார்.

Tags:

Leave a Reply