கர்ப்பிணி பெண் பலியாகக் காரணமாக இருந்த போக்குவரத்து காவல்ஆய்வாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா, உஷா இருவரும் திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வாகனச்சோதனையில் நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ், துரத்திச்சென்றார். 

இதில், ஆய்வாளர் எட்டி உதைத்தில் கீழே விழுந்த கர்ப்பிணி உஷா உயிரிழந்ததார் . இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்தலைவர்கள் பலர் இதற்கு கண்டனம்தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பதிவில், தம்பதிகள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது கடுமையாக நடந்துகொண்டதன் விளைவாக அப்பாவி கர்ப்பிணி பெண் இறப்பு மிகுந்த மனவேதனையையும் , அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்த கொடும்செயலுக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது தமிழக அரசு விசாரனை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Leave a Reply