காவிரி நதி நீர் பிரச்சனைக்காக அனைத்து கட்சிக்கூட்டத்தை திமுக கூட்டினால் பாஜக பங்கேற்காது என்று  தமிழகத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
சென்னை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டி என்ன செய்யபோகிறது? தமிழக அரசு அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக பங்கேற்கும்.
 
திமுக அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டினால் பாஜக பங்கேற்காது. அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுவது என்பது தமிழக அரசின் பொறுப்புமட்டுமே. தி.மு.க.,வும் காங்கிரஸும் காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் காரணத்துக் காகத்தான் என்பதை துணிச்சலாக சொல்கிறேன். காவிரிபிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆகையால் மத்திய அரசு சட்டதிட்டத்துக்கு உட்பட்டுதான் அணுக முடியும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Tags:

Leave a Reply