கோவை இந்துமுன்னணி சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பீளமேடு விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் தற்போது நடைபெற்றுவரும் வேலைநிறுத்தம், பேருந்துகள் உடைப்பு  உள்ளிட்ட போராட்டங்கள் தேவை யற்றது. தமிழகத்திற்கு காவிரி நீர் முழுமையாக தற்போது கிடைக்கவில்லை. ஆனால், இதற்கேதற்போது கர்நாடகாவில்  போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இது, கண்டிக்கத் தக்கது.

காவிரி நீர் கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமில்லை. தமிழக முதல்வரை, கர்நாடகாவில் மிகமோசமாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் பரவிவரும்  வன்முறையை, அம்மாநில முதல்வர் சித்தராமையா இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது தேசதுரோக சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழக நலனுக்கு எதிராக, கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply