காவிரி பிரச்னைக்காக ஜனாதிபதியை சந்தித்த வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் இதற்காக எத்தனைமுறை குரல் கொடுத்துள்ளனர்? சர்வகட்சி கூட்டத்தை கூட்டும் திமுக.,ஆட்சியிலிருந்தபோது என்ன செய்தது,'' என, மதுரையில் பாஜக., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் குற்றம் சாட்டினார்.


அவர் கூறியதாவது: மூன்று தொகுதிகளுக்கு தேர்தல்அறிவித்த அரைமணி நேரத்தில், பொறுப்பாளர்களை பா.ஜ., நியமித்தது. வேட்பாளர்களை முடிவுசெய்து, தலைமைக்கு அனுப்பியுள்ளோம். ஏற்கனவே இருதொகுதிகளில், பணப் புழக்கம் இருப்பதாக கமிஷனே ஒப்புக்கொண்டு, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபிரச்னை இந்த தேர்தலிலும் புகுந்துவிடாமல் கமிஷன் கவனமுடன் இருக்கவேண்டும்.திருப்பரங்குன்றம் தி.மு.க., வேட்பாளர் மீது ஊழல் குற்றச் சாட்டுள்ளது. அவர் காலாவதியான 'ஸ்டென்ட்' பயன்படுத்தியதாக குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்த வழக்கு அது. எனவே இடைத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்கு வழிசெய்யவேண்டும். காவிரி பிரச்னையில் வேண்டும் என்றே பா.ஜ., அரசு மீது காங்., தி.மு.க., குற்றம் சாட்டுகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் என்ன நடவடிக்கை எடுக்குமோ அதை பா.ஜ., அரசு எடுத்துவருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் ஸ்டாலின் தி.மு.க., அரசு இருந்த போது காவிரி பிரச்னையில் ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. . மத்திய அரசின் 'உதயதிட்டத்தை தமிழக அரசு ஏற்றதால், மக்கள் வரிப்பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. 300 ஏக்கரில் மருத்துவ பூங்கா செங்கற்பட்டில் அமைகிறது. நியூட்ரி னோவிற்கும், நியூக்கிலி யருக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல் கட்சிகள் திட்டத்தை எதிர்த்தன. இந்தகட்சிகளை புறந்தள்ளி, இடைத்தேர்தலில் பா.ஜ.க,விற்கு மக்கள் ஆதரவு தருவர். காவிரிபிரச்னைக்காக ஜனாதி பதியை சந்தித்த வைகோ, கம்யூ., தலைவர்கள் பார்லிமென்டில் எத்தனை முறை இப்பிரச்னைக்காக குரல்கொடுத்துள்ளனர்? அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளனர், என்றார்.

Leave a Reply