காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

காவிரி நீர்பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடகத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது உச்சநீதிமன்றம். மேலும் அக்டோபர் 4 ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி, நேற்று மாலை 5 மணிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்து க்கான ஒருங்கிணைப்பாளரை நியமிக்கவேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம் பெறும் தங்கள் மாநில பிரதிநிதிகளை பரிந்துரைக்கவேண்டும்.

இந்தக்குழு அமைக்கப்பட்டு, வரும் 6-ம் தேதிக்குள் தமிழகம், கர்நாடகா அணைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 6-ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் அந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் அந்தஉத்தரவில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து காவிரி மேலாண்மை அமைப்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப் படுத்தியுள்ளது .

Leave a Reply