காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்றுக்குழு அமைத்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புதுதில்லியில் செயல்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து செயல் படவுள்ளது.

மொத்தம் 9 உறுப்பினர்களைக்கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்தியநீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத்ஹுசைன் தலைவர் மற்றும் செயலாளராக ஏஎஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித் துறை முதன்மைச்செயலர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

Leave a Reply