காவேரி பிரச்சனையில் இப்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மத்திய அரசை செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் கட்சி தடுக்கிறது! காங்கிரசும் தமிழகத்தின் திமுகவும் நல்ல இணக்கமாகவே இருக்கும் சூழ்நிலையில்கூட, காவிரி தொடர்பாக ஒரு முறைக்கூட திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவரை சந்தித்து பேசி வற்புறுத்தவில்லை! கருனாநிதியும் இத்தகைய செயல் எதையும் செய்ததில்லை! கர்னாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது! இந்த காங்கிரசின் துரோகத்திற்கு தமிழக கழக கட்சிகள் அனைத்தும் ஒத்துழைத்து வருகின்றன!

இந்த வேளையில் முல்லைப்பெரியார் விவகாரத்தை நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்!  முல்லைப்பெரியார் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் 2006 ல் ஒரு தீர்ப்பு வழங்கியது! 136 அடியாக இருந்த அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்பதுதான் அந்த தீர்ப்பு! அப்போது மத்தியில் காங்கிரஸ் அரசும் மாநிலத்தில் திமுக அரசும் ஆட்சியில் இருந்தது! இரண்டு கட்சிகளும் கூட்டு சதி செய்து அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் விட்டார்கள்!

அதே தீர்ப்பு மீண்டும் 2014 ல் வந்தபோது பாஜக ஆட்சியில் இருந்ததால் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது! எப்போதுமே தமிழகத்திற்கு துரோகம் செய்வது கழக கட்சிகளும் காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும்தான்! தமிழகத்திற்கு நல்லது செய்தது பாஜகதான்! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதுபோல் காவிரி பிரச்சனையிலும் தமிழகத்தின் உரிமை பாஜகவால் நிலைநாட்டப்படும்!

இதே காவிரி பிரச்சினைக்கு 2007 ல் நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது மத்தியில் ஆளுங்கட்சிகளாக இருந்த திமுகவும் காங்கிரசும், தீர்ப்பினை சரியாக நடைமுறைப்படுத்தாமல் தமிழர்களுக்கு துரோகம் செய்தன!

காவிரி டெல்டா மற்றும் கங்கை டெல்டா பகுதிகளில் 2000 முதல் 3000 அடிவரையிலான ஆழத்திலிருந்து எரிவாய்வு மற்றும் எண்ணை எடுக்கும் திட்டத்தை துவக்கி வைத்தது திமுகவும் கம்யூனிஸ்டும் காங்கிரசும்தான்! திமுக ஆதரவோடு காங்கிரஸ் அரசால், கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் ஒத்துழைப்போடு அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நெடுவாசல் பகுதியில்தான் இந்த எண்ணை எரிவாய்வு எடுக்கும் திட்டம் துவக்கப்பட்டது!

அப்போது அந்த திட்டத்தை செயல்படுத்திய கம்பெனிகளிடமிருந்து பெருந்தொகை லஞ்சமாக பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது! இப்போதும் அதே திட்டம் செயல்படுத்தப்படுகிறது! இப்போது பாஜக ஆட்சியில் கம்பெனிகளிடமிருந்து தொடர்ந்து லஞ்சம் பெறமுடியாததால், அவர்களின் திட்டத்தையே அவர்களே எதிர்க்கிறார்கள்! திமுக கம்யூனிச்ட் காங்கிரஸ் கட்சிகளின் திட்டத்தை திமுக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிகளே எதிர்க்கின்றன! காரணம் இப்போது கம்பெனிகளிடமிருந்து லஞ்சம் வாங்க முடியாததேயென சொல்லப்படுகிறது! காரணம் நேர்மையான ஊழலை ஒழிக்கக்கூடிய பாஜக ஆட்சிகாலத்தில் லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொள்ள கம்பெனிகள் விரும்பவில்லை! முன்பெல்லாம் லஞ்சம் கொடுத்தால் அந்தத்தொகையை பலமடங்காக கம்பெனிகள் சம்பாதித்துக்கொள்ள  காங்கிரஸ் மத்திய அரசு ஒத்துழைக்குமாம்! இப்போதைய பாஜக மத்திய அரசு கராலாக இருப்பதால், கம்பெனிகள் லஞ்சம் கொடுக்கமறுக்கின்றன! எனவே திமுக கம்யூனிஸ்ட்டு காங்கிரஸ் கட்சிகள் கம்பெனியை எதிர்க்கின்றன!

ஓரடி ஈரடி ஆழத்திற்கு நீரை தேக்கி செய்யப்படும் புன்சை விவசாயத்திற்கும் 10 அடி 20 அடி ஆழத்திற்கு வேர்பாய்ச்சும் மரங்களை வளர்க்கும் புன்சை விவசாயத்திற்கும் விவசாயத்திற்கும், 2000 அடிக்குக்கீழ் எடுக்கப்படும் எரிவார்வுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாத நிலையில், சம்மந்தம் இருப்பதுபோல் சினிமா பொய்களை சொல்லி மக்களை ஏமாறுகிறார்கள்! எரிவாய்வு எடுக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படாது!

எரிவாய்வு விசயத்தில் பொய்யைச்சொல்லி மக்களை ஏமாற்றிவருவதைப்போல, காவிரி தீர்ப்பு விசயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கநினைக்கும் காங்கிரசை ஆதரித்து மத்திய பாஜக அரசு எதுவுமே செய்யாது என மக்களை குழப்பி வருகிறார்கள்!

ஆனால் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதைப்போல, காவிரி விவகாரத்திலும் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு சாதகமாக செயல்படும்! ஆனால், காங்கிரஸ் சதிசெய்யாத வகையில், காங்கிரசின் கூட்டணி கட்சியான திமுக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழர்களின் வேண்டுகோளாகும்!  

  நன்றி குமரிகிருஷ்ணன்

Leave a Reply