காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாஜ தேசியதலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று  மாலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன் எம்பி,  சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் கொண்டகுழுவினர் சந்தித்துபேசினர். இந்தசந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. சந்திப்பின்போது  காவேரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப் பட்டது. மேலும் காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமைகள் குறித்து இந்தகுழுவினர் அமித்ஷாவிடம்  எடுத்துரைத்தனர்.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சுப்பிரமணிய சாமி கூறிய கருத்து தொடர்பாகவும் சந்திப்பின்போது விரிவாக  விவாதிக்கப்பட்டது.

இந்தசந்திப்புக்கு பின்னர் தமிழிசை சவுந்தர ராஜன் அளித்த பேட்டியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருவதுகுறித்து  அமித்ஷாவிடம் விளக்கினோம். காவிரி விவகாரத்தில் நிரந்தரதீர்வு காணும் வகையில் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை  வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கும் உறுதியளித்தார். காவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்கு நிச்சயமாக துரோகம்செய்யாது” என்றார்.

Leave a Reply