பாஜக தோற்றுவிக்கப்பட்ட நாளான இன்று பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள மோடி, பாஜக உதயமான நாளான இன்று, மிகுந்த அர்ப்பணி் ப்போடும், வீரியம் மிகுந்த ஆற்றலோடும் உழைத்த பா.ஜ., தொடண்டர்களை தாம் வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவை நேசிக்கவும், தேசத்தை புதியஉச்சத்திற்கு கொண்டுசெல்லவும் பல தலைமுறைகளாக பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைத்துவருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை, கட்ச்சிலிருந்து அருணாச்சலபிரதேசம் வரை நாட்டு மக்கள் அனைவரும் பா.ஜ.க மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply