காஷ்மீரில் எல்.இ.டி பல்புகள் குறித்து வதந்திகள்பரவியது தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும்தகவல் வெளிவந்துள்ளது கடந்த சிலநாட்களாக மத்திய அரசின் உஜாலா திட்டத்தின் கீழ் காஷ்மீரில் வழங்கப்பட்ட எல்இடி பல்புகள் மூலம் மக்கள் கண்காணிக்கப் படுவதாக வதந்திகள் பரவி வந்தது. அதன் விளைவாகவே, கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டு வந்தது.

மத்திய அரசின் உஜாலா திட்டத்தின்கீழ் வழங்கிய எல்இடி பல்புகளில் கண்காணிப்புகருவி, கார்டு போன்றவற்றை பொருத்தி மக்களின் நடவடிக்கையை உளவு பார்ப்பதாக சமூகவலைதளத்தில் வதந்திகள் பரவியது.

  எல்.இ.டி பல்புகளால் ஏற்பட்ட  வதந்தியால் காஷ்மீர் மக்கள் தங்களின் வீட்டில் இருக்கும் எல்.இ.டி பல்புகள் மற்றும் சிம்கார்டுகளை கழற்றி தூக்கிஎரிந்தனர்.  இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும்தகவல்கள் வெளிவந்தது. அதாவது மத்தியஅரசு உஜாலா திட்டத்தின் கீழ் எல்.இ.டி பல்புகளை காஷ்மீரில் வழங்கியுள்ளது. இதன்காரணமாக எல்இடி பல்பு ஒன்றின் சந்தை விலை ரூ.250 என்ற போதிலும், அரசு ரூ.20 மான்யத்திற்கு எல்இ டி பல்புகளைவழங்கியது.

மத்திய அரசு , 250க்கு விற்பனை செய்ய வேண்டிய பல்பை மானிய விலையில் 20 ரூபாய் வழங்கியதால் அப்பகுதியில் உள்ள எல்.இ.டி பல்பு விற்பனையாளர்கள் கடும்நஷ்டம் அடைந்துள்ளனர். இதனை ஈடுகட்ட மத்திய அரசு மானியவிலையில் வழங்கிய எல்.இ.டி பல்புகள் குறித்து சில தவறாக வதந்திகளை விற்பனையாளர்கள் பரப்பியது தெரியவந்தது. 

இது தொடர்பாக வதந்திகள் குறித்த வீடியோவை தயாரித்து சமூகவலைதளங்களில் அவர்கள் பரவ செய்துள்ளனர். இது காட்டுத் தீ போல பரவி மத்தியஅரசு மாணிய விலையில் வழங்கியிருக்கும் எல்.இ.டி பல்புகளை மக்கள் உடைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், எல்.இ.டி பல்புகள் குறித்து பரவிவரும் வதந்திகள் முற்றிலும் பொய். விலை உயர்ந்த் கண்காணிப்பு பொருட்களை ஒருபல்பிற்குள் ஒளித்து வைப்பது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். இதனால் காஷ்மீரில் சிலநாட்களாக பரவி வந்த வதந்திகள் ஓய்ந்துள்ளது.

Leave a Reply