காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடை பெற்ற தேர்தலில் 98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பின் காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடை பெற்றிருப்பது இதுவே முதன்முறை. ஜம்மு, காஷ்மீர், லடாக் மற்றும் லே பிராந்தியங்களில் உள்ள 310 பஞ்சாயத்து கவுன்சில் களுக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாடு ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.
பாஜக, சுயேச்சைகள் என 1,065 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டி யிட்டனர். இதில் 98 சதவீத வாக்குகள் பதிவாகின.தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் வெளியிடப் பட்டன. அதன்படி, 310 பஞ்சாயத்து கவுன்சில்களில் 81 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். எஞ்சிய இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,”காஷ்மீரில் உள்ள 310 பஞ்சாயத்து கவுன்சில்களுக்கான தேர்தல் எந்தவித அசம்பாவிதமும், தடங்கலும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்ததேர்தலில் 98 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது என்பது ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப் படுத்துகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களையும் இது பெருமைப்பட வைத்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.