காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் -இ- முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ்படையைச் சேர்ந்த 30 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் மாலை 3.30 மணியளவில் 70க்கும் மேற்பட்ட வாகனங்களில், 2,500க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகருக்கு திரும்பி கொண்டிருந்தனர். சூரிய மறைவுக்கு முன்னர் முகாமுக்கு செல்லும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. வழக்கமாக, ஸ்ரீ நகருக்கு 1,000 சிஆர்பிஎப் வீரர்கள் செல்வார்கள். ஆனால், மோசமான வானிலையால் , ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஏதும் இல்லை. இதனால், 2,547 வீரர்கள் முகாமிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

.
இதனால், நெடுஞ்சாலையில், அவந்திப்போரா என்ற இடத்தில், \பயங்கரவாதி அடில் அகமது வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. பயங்கரவாதி அடில் அகமது தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் உயிர் இழந்தனர். இந்தசம்பவத்தில் 300 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிர் இழந்த வீரர்களின் உடல்பாகங்கள் சாலையில் சிதறி கிடந்தன. வெடிகுண்டு சத்தம் 10 முதல் 12 கி.மீ., தூரம் வரை கேட்டதாக உள்ளூர்மக்கள் தெரிவித்தனர்.

சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்களில், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதன் மூலம், அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்றசந்தேகம் பாதுகாப்பு படையினருக்கு உள்ளது.இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுபெற்ற ஜெய்ஷ்இ முகம்மது பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது. இதற்கு கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். வீர மரணம் அடைந்த நமது வீரர்களுக்கு நாட்டுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தரசிங் கூறியதாவது: இது போர்போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேரவேண்டும். இந்த தாக்குதல், அரசியல்வாதிகளுக்கு சிலசெய்திகளை அளித்துள்ளது என்றார்.

பிரதமர் மோடி: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. காயமடைந்த வீரர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டு மொத்த நாடே தோள் கொடுக்கும். மேலும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்

Tags:

Leave a Reply